Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராய்ப்பூரில் இருந்து டெல்லி வரை காங்கிரஸ் சலசலக்கிறது- சத்தீஸ்கர் முன்னாள் மந்திரி

ராய்ப்பூரில் இருந்து டெல்லி வரை காங்கிரஸ் சலசலக்கிறது- சத்தீஸ்கர் முன்னாள் மந்திரி

By: Karunakaran Thu, 16 July 2020 08:30:21 AM

ராய்ப்பூரில் இருந்து டெல்லி வரை காங்கிரஸ் சலசலக்கிறது- சத்தீஸ்கர் முன்னாள் மந்திரி

சட்டசபை தேர்தல் முடிவில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. இருப்பினும் பாஜக, காங்கிரஸ் இடையே குறைந்த அளவே வித்தியாசம் இருந்தது. இதனால் பாஜக எப்போது வேண்டுமானாலும் ஆட்சியை கவிழ்க்கலாம் என காங்கிரஸ் அச்சத்துடனே இருந்தது.

கர்நாடகாவில் குமாரசாமி கட்சியுடன் இணைந்து ஆட்சி நடத்தியபோது, காங்கிரஸ் கட்சியின் சிலர் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்ததால் அங்கு காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. மத்திய பிரதேசத்திலும் ஜோதிராத்திய சிந்தியா மற்றும் 20 எம்.எம்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைந்ததால் அங்கும் காங்கிரஸ் கட்சி கவிழ்ந்தது.

former chhattisgarh minister,raipur,delhi,congress ,சத்தீஸ்கர் முன்னாள் அமைச்சர், ராய்ப்பூர், டெல்லி, காங்கிரஸ்

ராஜஸ்தானில் சச்சின் பைலட்டுக்கும், முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதில் பைலட் பா.ஜனதாவுடன் இணைந்து ஆட்சியை கவிழ்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பைலட் பா.ஜனதாவில் சேரமாட்டேன் என்று கூறியதால், அங்கு கெலாட் ஆட்சிக்கு தற்போது ஆபத்து இல்லை.

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநில பாஜக முன்னாள் மந்திரி பிரிஜ்மோகன், ராய்ப்பூரில் இருந்து டெல்லி வரை காங்கிரஸ் கட்சி சலசலக்கிறது. அங்கு எந்தவொரு தலைமையும் இல்லை. அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆக, அவர்கள் தவறான முடிவுகளை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் நடைபெற்றது போன்று சத்தீஸ்கரிலும் நடைபெறுமோ என்று அவர்கள் தற்போது பயப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

Tags :
|
|