Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மத்தியில் வலிமையான அரசு அமைந்திருப்பதை காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை - பாஜக

மத்தியில் வலிமையான அரசு அமைந்திருப்பதை காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை - பாஜக

By: Karunakaran Tue, 30 June 2020 1:59:47 PM

மத்தியில் வலிமையான அரசு அமைந்திருப்பதை காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை - பாஜக

லடாக் எல்லை பகுதியில் இந்திய-சீன வீரர்களிடையே ஏற்பட்ட மோதல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோதல் விவகாரத்தில் மத்தியில் ஆளும் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே வார்த்தைப்போர் நடைபெற்று வருகிறது. நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் கொரோனா பரவலை மத்திய அரசு கையாளும் விதங்கள் தொடர்பாக தொடர்ந்து பாஜகவை காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.

காங்கிரசின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பாஜகவினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், உத்தரபிரதேசத்தின் ராம்பூரில் மத்திய சிறுபான்மை நலத்துறை மந்திரிமுக்தர் அப்பாஸ் நக்வி பேட்டி அளித்தபோது, காங்கிரஸ் தலைவர்களின் கருத்துகளை பார்க்கும்போது, ‘வெற்றுப்பாத்திரம் அதிக கூச்சலிடும்’ என்ற பழமொழிதான் எனக்கு நினைவுக்கு வருகிறது. தாங்கள் அதிகம் கற்றவர்கள் என்று நிரூபிக்கும் முயற்சியில், தங்கள் சொந்த கட்சியையே அழிக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

congress,bjp,central government,remote control ,காங்கிரஸ், பிஜேபி, மத்திய அரசு, ரிமோட் கண்ட்ரோல்

மேலும் அவர், தங்கள் ஆட்சியில் இருந்தது போல ‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் இயக்க முடியாத ஒரு வலிமையான மோடி அரசு மத்தியில் இன்று அமைந்திருப்பதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அவர்கள் இன்னும் நிலபிரபுத்துவ மனப்பான்மை மற்றும் அதிகார ஆணவத்திலேயே இருப்பதாக கூறியுளளார்.

நாட்டின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் வளர்ச்சிக்காக மோடி தலைமையிலான அரசு தங்களை அர்ப்பணித்திருப்பதாகவும், பொருளாதாரம், பாதுகாப்பு அல்லது எல்லை விவகாரத்தில் மோடி அரசு புதிய சாதனை வளர்ச்சியை உருவாக்கி இருப்பதாகவும், நாட்டுக்கே முதலிடம் என்பதே மோடி அரசின் மந்திரம் ஆகும் என்று முக்தர் அப்பாஸ் நக்வி கூறினார்.

Tags :
|