Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காங்கிரசுக்கு ஜனவரி மாதம் புதிய தலைவர் நியமிக்கப்பட வாய்ப்பு

காங்கிரசுக்கு ஜனவரி மாதம் புதிய தலைவர் நியமிக்கப்பட வாய்ப்பு

By: Nagaraj Wed, 26 Aug 2020 5:47:03 PM

காங்கிரசுக்கு ஜனவரி மாதம் புதிய தலைவர் நியமிக்கப்பட வாய்ப்பு

காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் ராஜினாமா செய்த பின்னர் இதுவரை தலைவர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் புதிய தலைவர் தேர்ந்து எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் இடைக்கால தலைவர் பதவியை சோனியா காந்தி ராஜினாமா செய்ய முன்வந்தபோதிலும், அதை தலைவர்கள் ஏற்கவில்லை.

congress,new leader,in january,rahul gandhi ,காங்கிரஸ், புதிய தலைவர், ஜனவரி மாதம், ராகுல் காந்தி

இந்நிலையில் அக்கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களில் ஒருதரப்பினர் அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தை ஓராண்டுக்குள் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், ராகுல் காந்தி உள்ளிட்டோர் 6 மாதத்தில் நடத்த வலியுறுத்தினர்.

இந்நிலையில் ஆங்கில செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் பெயர் தெரிவிக்க விரும்பாத 2 காங்கிரஸ் மூத்த தலைவர்கள், அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம், ஜனவரி மாதம் நடைபெற இருப்பதாகவும், அப்போது புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் எனவும் தெரிவித்துள்ளனர்.

Tags :