Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஹாத்ரஸ் சம்பவத்தைக் கண்டித்து இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்

ஹாத்ரஸ் சம்பவத்தைக் கண்டித்து இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்

By: Nagaraj Mon, 05 Oct 2020 09:46:08 AM

ஹாத்ரஸ் சம்பவத்தைக் கண்டித்து இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்

நாடு தழுவிய போராட்டம்... ஹாத்ரஸ் சம்பவத்தைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்றுநாடு தழுவிய போராட்டம் நடத்தப்படுகிறது.

உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 19 வயது தலித் பெண், தில்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். அவரின் உடலை காவல்துறையினா் புதன்கிழமை அதிகாலை அவசரகதியில் தகனம் செய்தனா். இந்த சம்பவத்தை அறிந்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினா் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க முயன்றனா்.

ஆனால் ஹாத்ரஸில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறி, அவா்களுக்கு காவல்துறையினா் அனுமதி வழங்க மறுத்தனா். இதனால் அரசியல் கட்சியினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க ஊடகங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

congress,struggle,announcement,hathras affair,executives ,
காங்கிரஸ், போராட்டம், அறிவிப்பு, ஹாத்ரஸ் விவகாரம், நிர்வாகிகள்

இந்நிலையில் ஹாத்ரஸ் செல்ல ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோருக்கு காவல்துறையினா் சனிக்கிழமை அனுமதி வழங்கினா். காவல்துறையினா் அனுமதி வழங்கியதை தொடா்ந்து ராகுல் காந்தி, பிரியங்கா வதேரா ஆகியோா் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினா். சுமாா் 45 நிமிஷங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது.

அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க ஊடகங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இதனிடையே ஹாத்ரஸ் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரப் பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் நேற்று உத்தரவிட்டாா். இந்த நிலையில் ஹாத்ரஸ் சமபவத்துக்கு நீதி கேட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடு தழுவிய சத்தியாக்கிரக போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.

மாநிலங்கள் மற்றும் மாவட்ட தலைமையகங்களில் இந்தப் போராட்டம் நடைபெறும் எனக் குறிப்பிட்டுள்ள அவர் போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பிக்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

Tags :