Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பசுவதை தடுப்பு சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து போராடும் - டி.கே.சிவக்குமார் அறிவிப்பு

பசுவதை தடுப்பு சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து போராடும் - டி.கே.சிவக்குமார் அறிவிப்பு

By: Karunakaran Sat, 19 Dec 2020 08:47:30 AM

பசுவதை தடுப்பு சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து போராடும் - டி.கே.சிவக்குமார் அறிவிப்பு

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நேற்று பல்லாரி மாவட்டம் ஹூவினகடஹள்ளி அருகே மைலாரா கிராமத்தில் உள்ள மைலாரலிங்கேஷ்வரா கோவிலுக்கு சென்றபின்னர் அவர், மைலார லிங்கேஷ்வரா சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். மேலும் வெள்ளியால் ஆன ஹெலிகாப்டரை டி.கே.சிவக்குமார் காணிக்கையாக வழங்கினார்.

இதற்கு முன்பு கடந்த 2017-ம் ஆண்டும் இதே கோவிலுக்கு டி.கே.சிவக்குமார் வந்திருந்தார். அதன்பிறகு, அவர் மந்திரி பதவியை இழந்ததுடன், சிறைக்கும் சென்றிருந்தார். டி.கே.சிவக்குமாரின் பிரச்சினைகள் நீங்க, மைலாரலிங்கேஷ்வரா சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும் என்று பூசாரி வெங்கடப்பா உடையார் கூறி இருந்தார். அதன் காரணமாக 3 ஆண்டுகளுக்கு பின்பு நேற்று அவர் பல்லாரிக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்திருந்தார்.

congress,cow prevention act,dk sivakumar,karnataka

பின்னர் அங்கிருந்து அவர் தார்வார் மாவட்டம் உப்பள்ளிக்கு சென்றார். உப்பள்ளியில் வைத்து டி.கே.சிவக்குமார் அளித்த பேட்டியின் போது, கர்நாடக மேல்-சபையில் காங்கிரசுக்கு போதிய உறுப்பினர்களின் பலம் இல்லை. ஆனால் மேல்-சபையில் பா.ஜனதா உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம் சரியில்லை. பா.ஜனதாவுக்கு சபையின் விதிமுறைகள் தெரியாதா?. மேல்-சபையில் சட்டமசோதாக்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே கலாட்டாவில் ஈடுபட்டனர். மேல்-சபை தலைவர் பதவி மீது காங்கிரசுக்கு ஆசையில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், விவசாயிகளுக்கு எதிரான நிலச்சீர்திருத்த சட்டம், பசுவதை தடுப்பு சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தால் விவசாயிகளுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படும். பசுவதை தடுப்பு சட்டம் மூலம் ஒரு தரப்பினரின் ஆதரவை பெற பா.ஜனதா முன்வந்துள்ளது. பசுவதை தடுப்பு சட்டத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து பா.ஜனதா சிந்திக்கவில்லை. காங்கிரஸ் எப்போதும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும். பசுவதை தடுப்பு சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து போராடும் என்று கூறினார்.

Tags :