Advertisement

நெல்லை மாவட்டத்தில் புதிதாக 95 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Mon, 06 July 2020 2:29:07 PM

நெல்லை மாவட்டத்தில் புதிதாக 95 பேருக்கு கொரோனா உறுதி

நெல்லை மாவட்டத்தில் நேற்று வரை 1,030 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று புதிதாக 95 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் நேற்று புதிதாக 4 ஆயிரத்து 150 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 151 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு தமிழகத்தில் இதுவரை 1,510 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 68,254 ஆக அதிகரித்துள்ளது.

coronavirus,vulnerability,kills,treatment,mask ,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை,முகக்கவசம்

நெல்லை மாவட்டத்தில் நேற்று வரை 1,030 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 671 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 350 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் 95 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,125-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மாநில அரசு பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மக்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு செல்லக்கூடாது என்றும் வெளியில் செல்லும்போது முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tags :
|