Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,509 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,509 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Karunakaran Wed, 05 Aug 2020 5:01:01 PM

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,509 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் நடமாட்டம் அதிகரித்தாலும், கொரோனா பரிசோதனைகள் அதிகரித்தாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 52,509 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 857 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை 19,08,255 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும் கொரோனாவிலிருந்து இதுவரை 12.82 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

coronavirus,india,corona prevalence,corona death ,கொரோனா வைரஸ், இந்தியா, கொரோனா பாதிப்பு, கொரோனா மரணம்

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புடைய 5.86 லட்சத்துக்கும் அதிகமானோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நாடு முழுவதும் இதுவரை கொரோனா பாதிப்பினால் 39795 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழகம்,டெல்லி மாநிலங்கள் உள்ளன. தற்போது கர்நாடகா,குஜராத் போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|