Advertisement

மதுரையில் புதிதாக 64 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Monisha Tue, 20 Oct 2020 10:00:58 AM

மதுரையில் புதிதாக 64 பேருக்கு கொரோனா பாதிப்பு

மதுரையில் நேற்று புதிதாக 64 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆயிரத்து 84 ஆக உயர்ந்துள்ளது.

மதுரையில் கொரோனா வைரஸ் தொற்று மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. தினமும் 80-க்கும் குறைவான நபர்களே பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் கொரோனா பாதிப்புடன் மதுரை தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் நேற்று இறந்து போனார்கள். இதுபோல், அரசு ஆஸ்பத்திரியிலசிகிச்சை பெற்று வந்த 71 வயது மூதாட்டியும் உயிரிழந்தார். இவர்களுக்கு கொரோனா பாதிப்புடன் வேறு சில நோய்களும் இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இவர்களை சேர்த்து மதுரையில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 409 ஆக உயர்ந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று மதுரையில் ஒரே நாளில் 4 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்திருக்கிறார்கள்.

madurai,corona virus,infection,treatment,death ,மதுரை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

இதுபோல், மதுரையில் நேற்று புதிதாக 64 பேருக்கு நோய் தொற்று இருப்பது தெரியவந்தது. அவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலான நபர்கள் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். நேற்றுடன் சேர்த்து மதுரையில் இதுவரை 18 ஆயிரத்து 84 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 16 ஆயிரத்து 916 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நேற்றும் 76 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பினர். இவர்களை தவிர 759 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

Tags :