Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 25 நாட்களுக்கு பின்னர் தாய்லாந்தில் மீண்டும் 5 பேருக்கு கொரோனா

25 நாட்களுக்கு பின்னர் தாய்லாந்தில் மீண்டும் 5 பேருக்கு கொரோனா

By: Nagaraj Fri, 19 June 2020 8:54:15 PM

25 நாட்களுக்கு பின்னர் தாய்லாந்தில் மீண்டும் 5 பேருக்கு கொரோனா

மீண்டும் 5 பேருக்கு கொரோனா... தாய்லாந்தில் கடந்த 25 நாட்களுக்கு மேலாக கரோனா தொற்று பதிவாகாத நிலையில், தற்போது வெளிநாட்டிலிருந்த வந்த 5 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதார அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளதாவது; 'தாய்லாந்தில் சுமார் 25 நாட்களாக உள்நாட்டில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லாத நிலையில் தற்போது வெளிநாட்டிலிருந்து வந்த 5 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் சவுதியிலிருந்து வந்தவர்கள்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் 3,146 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் 3,008 பேர் குணமடைந்துள்ளனர். 58 பேர் உயிரிழந்துள்ளனர்.

thailand,corona,hope,5 people again,hotels ,தாய்லாந்து, கொரோனா, நம்பிக்கை, மீண்டும் 5பேர், விடுதிகள்

கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதத்தில் பெரும்பாலான நாடுகள் அதன் எல்லைகளை மூடின. தற்போது கொரோனா தொற்று நீடித்தாலும் பொருளாதார நோக்கைக் கருத்தில் கொண்டு எல்லைகளைத் திறந்து வருகின்றன. இந்நிலையில் சுற்றுலாத் துறையில் அதிக வருமானம் ஈட்டும் தாய்லாந்தும் வெளிநாட்டுப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் புதிய மாற்றங்களைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக, தங்கும் விடுதிகளுக்கு மருத்துவச் சான்றிதழ் வழங்கப்படும் என்றும், விடுதிகள் 50 சதவீத அளவில் மட்டும் பயணிகளை அனுமதிக்கும் என்றும், அதன் மூலம் சமூக இடைவெளி உறுதி செய்யப்படும் என்றும் தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

Tags :
|
|