Advertisement

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 115 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Fri, 18 Sept 2020 10:40:10 AM

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 115 பேருக்கு கொரோனா உறுதி

வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 13,162 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் புதிதாக 115 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை மொத்த 5 லட்சத்து 25 ஆயிரத்து 420 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

ஆனாலும் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 618 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 610 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

vellore district,corona virus,infection,death,treatment ,வேலூர் மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, கோவை, கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 13,162 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 115 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,277 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 11,987 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இதுவரை 199 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :
|