Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நோய் பரவும் அபாயத்தால் கொரோனா கட்டுப்பாடுகள் தொடரும்- ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால்

நோய் பரவும் அபாயத்தால் கொரோனா கட்டுப்பாடுகள் தொடரும்- ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால்

By: Monisha Tue, 15 Dec 2020 11:32:43 AM

நோய் பரவும் அபாயத்தால் கொரோனா கட்டுப்பாடுகள் தொடரும்- ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால்

புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனா கட்டுப்பாடுகள் தொடரும் என்று இயக்குநர் ராகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். இது குறித்து புதுவை ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

புதுவை ஜிப்மரில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்ட விதிமுறைகள் அக்டோபர் 28-ம் தேதி முதல் படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ளது. இதில் தொலைபேசி மருத்துவ ஆலோசனையை அடிப்படையாக கொண்டு அவசியம் மருத்துவ உதவி தேவைப்படும் நோயாளிகள் மட்டுமே மருத்துவமனைக்கு அழைக்கப்பட்டனர். ஒரு நாளைக்கு ஒரு துறைக்கு 25 வெளிநோயாளிகள் வரவழைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை 100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவம், அறுவை சிகிச்சை, மகப்பேறு போன்ற பெரிய துறைகளில் ஒரு நாளைக்கு சுமார் 250 வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அத்துடன் மருத்துவ, அறுவை சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறைகளில் 400 வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் ஒவ்வொரு நாளும் கொரோனா அல்லாத பல்வேறு மருத்துவ பிரிவுகளில் வெளிப்புற சிகிச்சைகளை பெறுகின்றனர்.

corona,control,relaxation,press release,booking ,கொரோனா,கட்டுப்பாடு,தளர்வு,செய்திக்குறிப்பு,முன்பதிவு

அவசர பிரிவுகளில் சராசரியாக 400 நோயாளிகளுக்கு எலும்பியல், இருதயவியல், நரம்பியல் அறுவை சிகிச்சை, மகப்பேறியல் போன்ற பல்வேறு அவசர சிகிச்சை பிரிவுகளிலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனா பிரிவில் சுமார் 600 நோயாளிகளுக்கு அவசர மற்றும் வெளிப்புற சிகிச்சை அளித்துவந்த நிலையில் தற்போது சுமார் 300 நோயாளிகளுக்கு அவசர மற்றும் வெளிப்புற சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஜிப்மரில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட படுக்கைகளில் 1,200 நோயாளிகள் பல்வேறு பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் சமூகத்திலும், மருத்துவமனைகளிலும் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த தளர்வுகள் காரணமாக நோய் பரவும் அபாயத்தை கருத்தில்கொண்டு அனைத்து நோயாளிகளும் மற்றும் அவர்களின் உதவியாளர்களும் கொரோனா கட்டுப்பாடுகளான முகக்கவசம் அணிந்து வருதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், ஒரு நோயாளியுடன் ஒருவருக்கு மட்டுமே அனுமதி மற்றும் தொலைபேசி முன்பதிவு மருத்துவ சேவை போன்றவை தொடரும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|