Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நார்வே வந்த கப்பலில் பயணிகள் உட்பட 41 பேருக்கு கொரோனா பாதிப்பு

நார்வே வந்த கப்பலில் பயணிகள் உட்பட 41 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Nagaraj Tue, 04 Aug 2020 5:04:32 PM

நார்வே வந்த கப்பலில் பயணிகள் உட்பட 41 பேருக்கு கொரோனா பாதிப்பு

கப்பலில் வந்த 41 பேருக்கு கொரோனா... நார்வே வந்த கப்பலொன்றில் பயணிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட 41 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

'எம்.எஸ். ரோல்ட் அமுண்ட்சன்' என்ற இந்த கப்பலில் பயணித்த மேலும் நூற்றுக்கணக்கான பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டு சோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் கப்பலை வைத்திருக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நார்வே நிறுவனமான ஹர்டிகிரூட்டனுக்கு சொந்தமான இந்தக் கப்பல் வெள்ளிக்கிழமை வடக்கு நார்வேயில் உள்ள டிராம்சோ துறைமுகத்தை வந்தடைந்தது.

norwegian ship,corona,denial of permission,passengers ,நார்வே கப்பல், கொரோனா, அனுமதி மறுப்பு, பயணிகள்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கப்பலின் அனைத்து பயணிங்களையும் ஹர்டிகுரூட்டன் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது.

530 பணிகளை ஏற்றுச் செல்லும் திறன் கொண்ட இந்த கப்பலில் தற்போது 160 பணியாளர்களும் 177 பயணிகளும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேநேரம் கப்பலில் பயணித்த பயணிகளுக்கும் 14 நாட்களுக்குள் தரையிறங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ரோல்ட் அமுண்ட்சென் கப்பலில் கொரோனா தொற்று ஆரம்பம் ஆவதற்கு முன்னர் ஏதேனும் சுகாதார ஆலோசனை சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக என்பதை விசாரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tags :
|