Advertisement

பேலியகொட மீன் சந்தை வர்த்தகர்கள் 46 பேருக்கு கொரோனா

By: Nagaraj Wed, 21 Oct 2020 3:47:07 PM

பேலியகொட மீன் சந்தை வர்த்தகர்கள் 46 பேருக்கு கொரோனா

மீன் சந்தை வர்த்தகர்களுக்கு கொரோனா... பேலியகொட மீன் சந்தையில் 46 வர்த்தகர்கள் உட்பட 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதார வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் 105 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனையில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பேலியகொட மீன் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 46ம் இலக்க வார்ட்டில் சிகிச்சை பெற்ற நோயாளர் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

corona,fish market,traders,experiment ,கொரோனா, மீன் சந்தை, வர்த்தகர்கள், பரிசோதனை

இதனைத் தொடர்ந்து, அங்கு சிகிச்சை பெற்று வந்த அனைத்து நோயாளர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர். தற்போதைய நிலையில் இலங்கையில் இதுவரை 4 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொற்றுநோயியல் பணியகத்தினால் 8 ஆயிரத்து 270 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்தவகையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பிரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 6 ஆயிரத்து 466 ஆக உள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 5811 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|