Advertisement

கிழக்கு மாகாணத்தில் இதுவரை 994 பேருக்கு கொரோனா

By: Nagaraj Mon, 28 Dec 2020 8:40:32 PM

கிழக்கு மாகாணத்தில் இதுவரை 994 பேருக்கு கொரோனா

இதுவரை 994 பேருக்கு கொரோனா... கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 994பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அழகையா லதாகரன் மேலும் கூறியுள்ளதாவது:

பேலியகொட மீன்சந்தை கொத்தணியின் பின்னர் நேற்று காலை வரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர், அன்டிஜன் பரிசோதனைகளின் பிரகாரம் 994பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். அந்தவகையில் மாவட்டங்கள் வாரியாக பார்க்கின்றபோது திருகோணமலை மாவட்டத்தில் 122பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 131 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 24பேரும் கல்முனை பிராந்தியத்தில் 717பேரும் மொத்தமாக 994பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

corona,fully healed,transplanted,masonry ,
கொரோனா, பூரண குணமடைந்தனர், இடமாற்றியுள்ளோம், கொத்தணி

கொவிட் தொற்று ஏற்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 528பேர் குணமடைந்துள்ளார்கள். 485பேர் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்றுவருகின்றார்கள். 5மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 5மரணங்களில் 4 மரணங்கள் கல்முனை பிராந்தியத்திலும் ஒரு மரணம் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பகுதியிலும் பதிவாகியுள்ளது.

பெகலியகொட மீன்சந்தை கொத்தணியின் பிற்பாடு இதுவரை வைத்தியசாலைகளில் 2268பேர் உள்வாங்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுள் 1763பேர் பூரண குணமடைந்து சென்றுள்ளனர். 11பேரை நாங்கள் இடமாற்றியுள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.

Tags :
|