Advertisement

இங்கிலாந்திலிருந்து மதுரை வந்தவருக்கு கொரோனா

By: Monisha Sat, 26 Dec 2020 12:06:57 PM

இங்கிலாந்திலிருந்து மதுரை வந்தவருக்கு கொரோனா

கொரோனா வைரஸ் உருமாற்றமாகி இங்கிலாந்தில் பரவுவது கண்டுடிக்கப்பட்டுள்ளது. இது சாதாரண கொரோனா வைரசை விட 70 சதவீதம் வேகமாக பரவி வருவதாகவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே இங்கிலாந்தில் இருந்து வரும் விமான சேவையை இந்தியா முற்றிலும் ரத்து செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கொரோனா தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், மதுரை விமான நிலையத்திற்கு சமீபத்தில் வெளிநாடுகளில் இருந்து 2601 பயணிகள் வந்துள்ளனர். அதில் 88 பேர் லண்டனில் இருந்து வந்தவர்கள். அவர்களில் 63 பேர் நகர் பகுதியையும், மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியையும் சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் தனித்தனியாக அடையாளம் காணப்பட்டு சுகாதாரத்துறையின் மூலம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். மேலும், அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. நேற்று மாலை நிலவரப்படி 53 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஒருவருக்கு மட்டும் பாதிப்பு உள்ளது எனவும், மற்றவர்களுக்கு கொரோனா இல்லை எனவும் தகவல் வெளியானது.

corona,aviation,examination,vulnerability,symptom ,கொரோனா,விமான சேவை,பரிசோதனை,பாதிப்பு,அறிகுறி

கொரோனா உறுதி செய்யப்பட்டவர், மதுரை நகர் பகுதியை சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார். இதனை தொடர்ந்து அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா தனிமைப்படுத்துதல் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், அவருடைய குடும்ப நபர்கள் 11 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான முடிவுகள் இன்னும் வரவில்லை. வந்த பின்னர்தான் அந்த வாலிபரிடம் இருந்து வேறு யாருக்காவது தொற்று பரவியிருக்கிறதா? என்பது தெரியவரும்.

லண்டனில் இருந்து வந்தவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் சங்குமணி கூறியதாவது:- லண்டன் சென்று திரும்பிய வாலிபருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏ- சிம்டமெட்டிக் எனப்படும் லேசான பாதிப்புதான் அது. அவருக்கு உடல்ரீதியாக வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்பதால் அவர் நலமுடன் இருக்கிறார். மேலும், அவர் வெளிநாட்டுக்கு சென்று வந்து ஒரு மாதம் ஆகிறது. அதனால் அவருக்கு லண்டனில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றியிருக்க வாய்ப்புகள் மிக குறைவு. இருப்பினும் அவருக்கு எல்லா விதமான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் மருந்து வழங்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் இருக்கிறார் என அவர் கூறினார்.

Tags :
|