Advertisement

நாமக்கல்லில் இதுவரை 11,075 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Monisha Sat, 26 Dec 2020 2:13:24 PM

நாமக்கல்லில் இதுவரை 11,075 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 11,048 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனிடையே ஒருவரின் பெயர் பிற மாவட்ட பட்டியலில் இருந்து நாமக்கல் மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டது.

இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்‌ எண்ணிக்கை 11,049 ஆக ஆனது. இந்நிலையில் நேற்று மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி செவிலியர் உள்பட 26 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

department of health,corona,nurse,test,treatment ,சுகாதாரத்துறை,கொரோனா,செவிலியர்,பரிசோதனை,சிகிச்சை

இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,075 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 23 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.

நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 108 பேர் பலியான நிலையில், 10,781 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் 186 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags :
|
|
|