Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 61,408 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 61,408 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Karunakaran Mon, 24 Aug 2020 11:13:28 AM

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 61,408 பேருக்கு கொரோனா பாதிப்பு

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. 8 மாத காலத்தில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி விட்டது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கைநாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புகளுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 61,408 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மொத்த எண்ணிக்கை 31 லட்சத்து 06 ஆயிரத்து 349 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

coronavirus,india,corona death,corona prevalence ,கொரோனா வைரஸ், இந்தியா, கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

தற்போது கொரோனா பாதிப்புகளுக்கு 7 லட்சத்து 10 ஆயிரத்து 771 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 57,468 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால், இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 23 லட்சத்து 38 ஆயிரத்து 036 பேராக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 836 பேர் பலியாகியுள்ளதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 57,542 ஆக உயர்வடைந்துள்ளது. நாட்டில் கொரோனா பரிசோதனைகளும் அதிக அளவில் நடத்தப்படுகின்றன. நேற்று 6,09,917 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டதன் மூலம் பரிசோதனை எண்ணிக்கை 3 கோடியே 59 லட்சத்து 02 ஆயிரத்து 137 ஆக உயர்ந்துள்ளது.

Tags :
|