Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரோவுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரோவுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு

By: Nagaraj Thu, 16 July 2020 7:38:45 PM

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரோவுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு மீண்டும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியிலேயே 65 வயதான ஜெய்ர் போல்சனாரோ, இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று நோயிலிருந்து இன்னும் தான் குணமடையவில்லை என்று போல்சனாரோ குறிப்பிட்டுள்ளார். சில தினங்களில் மீண்டும் பரிசோதனை செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

president of brazil,respiratory distress,fever,corona,infection ,பிரேசில் அதிபர், சுவாசக்கோளாறு, காய்ச்சல், கொரோனா, பாதிப்பு

பிரேசிலியாவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் தனிமைப்படுத்தலில் இருப்பதாகவும், அங்கிருந்து இணைய வழி காணொளியின் மூலம் தொடர்ந்து பணியாற்றுவதாகவும் கூறினார். இதேவேளை, ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ, ஹைட்ராக்ஸி குளோரோகுயினை கொரோனா வைரஸுக்கு சிகிச்சையாக தொடர்ந்து பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது முறையாக கொவிட்-19க்கு நேர்மறையை பரிசோதித்த போல்சனாரோ, சர்ச்சைக்குரிய மலேரியா மருந்தின் நன்மைகளை விளக்கும் காணொளியை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். எனினும், ஹைட்ராக்ஸி குளோரோகுயினின் நன்மைகளைப் பற்றி விஞ்ஞானிகள் அவ்வளவு உறுதியாக நம்பவில்லை. கடுமையான பக்க விளைவுகளைப் பற்றி மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் கொவிட்-19 நோயாளிகளுக்கு அதிக இறப்பு ஆபத்து இருப்பதாகக் கண்டறியப்பட்டது. ஜூலை 6ஆம் திகதி காய்ச்சல் அல்லது சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகள் எதுவும் தனக்கு இல்லை என குறிப்பிட்ட போல்சனாரோவுக்கு, 7ஆம் திகதி வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

Tags :
|
|