Advertisement

தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்தது!

By: Monisha Thu, 22 Oct 2020 5:33:14 PM

தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்தது!

நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நேற்று 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் நெல்லை மாநகர பகுதியை சேர்ந்தவர்கள் 11 பேர், பாளையங்கோட்டை யூனியன் பகுதியை சேர்ந்தவர்கள் 8 பேர் அடங்குவர். இதுதவிர அம்பை, வள்ளியூர், சேரன்மாதேவி, களக்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 977-ஆக உள்ளது.

nellai,tenkasi,thoothukudi,corona virus,infection ,நெல்லை,தென்காசி,தூத்துக்குடி,கொரோனா வைரஸ்,பாதிப்பு

தென்காசி மாவட்டத்தில் நேற்று 7 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் தென்காசி, செங்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்த மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 7,759-ஆக உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 17 பேர் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் இந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 593-ஆக உள்ளது. இதில் 13 ஆயிரத்து 964 பேர் முழுமையாக குணமடைந்து உள்ளனர். மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 507 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 126 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்து உள்ளனர்.

Tags :
|