Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நெல்லை மாவட்டத்தில் இரு தினங்களாக கொரோனா மீண்டும் அதிகரிப்பு

நெல்லை மாவட்டத்தில் இரு தினங்களாக கொரோனா மீண்டும் அதிகரிப்பு

By: Monisha Thu, 27 Aug 2020 2:28:31 PM

நெல்லை மாவட்டத்தில் இரு தினங்களாக கொரோனா மீண்டும் அதிகரிப்பு

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் வேகம் குறைந்து வந்த நிலையில் தற்போது இரு தினங்களாக மீண்டும் அதிகரித்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த மாதம் தினசரி பாதிப்பு சராசரியாக 200-ஐ தாண்டி வந்த நிலையில் இம்மாதத்தில் படிப்படியாக குறைந்து இரட்டை இலக்கத்திற்கு சென்றது. ஆனால் நேற்று முன்தினம் ஒரேநாளில் 204 பேருக்கு தொற்று உறுதியாகி தினசரி பாதிப்பு மீண்டும் அதிகரித்தது. இதேபோல நேற்றும் 156 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 8,911 ஆக உயர்ந்துள்ளது.

சமீபகாலமாக பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் மக்கள் செல்வதும், சமூக இடைவெளி இல்லாமல் கூடுவது அதிகரிப்பதுமே மீண்டும் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

nellai district,corona virus,infection,treatment,kills ,நெல்லை மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

சில நாட்களுக்கு முன்புவரை வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களால் தொற்று அதிகரித்து வந்தநிலையில் தற்போது நோயாளியின் வீட்டிற்கு அருகில் உள்ள வீடுகள், பழகிய நண்பர்கள் என அனைத்து தரப்பினருக்கும் தொற்று பரவி வருகிறது.

நெல்லையில் டவுன், பாளை சமாதானபுரம் பகுதிகளில் உள்ள மார்க்கெட் கடைகள், ரதவீதிகளில் சமூக இடைவெளியின்றி மக்கள் கூட்டம் எப்போதும் காணப்படுகிறது. சமூக இடைவெளியை மறந்து பொதுமக்கள், வியாபாரிகள் எவ்வித அச்சமும் இன்றி முக கவசம் அணியாமல் வெளியே செல்கின்றனர்.

இதனை தடுக்க முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பொருட்கள் தரக்கூடாது, மக்கள் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை கடை பிடிக்க கடைக்காரர்கள் அறிவுறுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்து வருகிறது.

Tags :