Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மதுரை மற்றும் தேனியில் அதிகரிக்கும் கொரோனா...ஒரே நாளில் 526 பேருக்கு பாதிப்பு

மதுரை மற்றும் தேனியில் அதிகரிக்கும் கொரோனா...ஒரே நாளில் 526 பேருக்கு பாதிப்பு

By: Monisha Fri, 24 July 2020 2:01:47 PM

மதுரை மற்றும் தேனியில் அதிகரிக்கும் கொரோனா...ஒரே நாளில் 526 பேருக்கு பாதிப்பு

சென்னையை தொடர்ந்து தமிழகத்தில் மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குள் நாள் உயர்ந்து வருகிறது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 92 ஆயிரத்து 964 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மொத்தம் 1 லட்சத்து 36 ஆயிரத்து 793 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் 3 ஆயிரத்து 232 பேர் இதுவரை கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவுக்கு பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 90,900 ஆக அதிகரித்து உள்ளது. சென்னைக்கு அடுத்தப்படியாக செங்கல்ப்பட்டு, திருவள்ளூர், மதுரை, தேனி, விழுப்புரம், நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டக்களில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

madurai,theni,corona virus,infection,death,treatment ,மதுரை,தேனி,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

மதுரை மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி கொரோனா தொற்றால் மேலும் 318 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9000 கடந்ததுள்ளது. மேலும் 2,836 பேர் சிகிச்சை பெற்று வருகினறனர். 5965 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 183 பேர் உயிரிழந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி ஒரே நாளில் மேலும் 208 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 464 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,421 பேர் சிகிச்சை பெற்று வருகினறனர்.

Tags :
|
|