Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் அதிர்ச்சி... 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் அதிர்ச்சி... 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Mon, 12 Oct 2020 10:35:25 AM

கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் அதிர்ச்சி... 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் கடந்த மார்ச் மாத இறுதியில் மூடப்பட்டது. இதனையடுத்து, வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து கடந்த மாதம் 18-ந் தேதி கோயம்பேடு உணவு தானிய அங்காடியும், 28-ந் தேதி காய்கறி சந்தையும் திறக்கப்பட்டது. காய்கறி சந்தை திறக்கப்பட்டாலும் பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. 200 பெரிய மொத்த வியாபார கடைகள் மட்டும் திறக்கப்பட்டன.

குறிப்பாக கடந்த மாதம் 18-ந் தேதி முதல் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் தினந்தோறும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் வியாபாரிகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் கடந்த மாதம் 18-ந் தேதி முதல் கடந்த 10-ந் தேதி வரையிலான 22 நாட்களில் 2 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

koyembedu market,corona virus,testing,vulnerability,traders ,கோயம்பேடு மார்க்கெட்,கொரோனா வைரஸ்,பரிசோதனை,பாதிப்பு,வியாபாரிகள்

சென்னையில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள், தொழிலாளர்கள் உள்பட 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இது 1.5 சதவீதமாகும். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் விவரங்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்றவற்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

சென்னையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்ட கோயம்பேடு மார்க்கெட் 6 மாதங்களுக்கு பிறகு கடந்த மாதம் திறக்கப்பட்டது. தற்போது மீண்டும் வியாபாரிகள், தொழிலாளர்களிடையே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Tags :