Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இரண்டு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று; தென்ஆப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே தூதரகம் மூடல்

இரண்டு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று; தென்ஆப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே தூதரகம் மூடல்

By: Nagaraj Wed, 24 June 2020 11:25:16 AM

இரண்டு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று; தென்ஆப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே தூதரகம் மூடல்

2 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே தூதரகம் மூடப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட முதல் நாடாக தென் ஆப்பிரிக்கா உள்ளது. அந்த நாட்டில் இதுவரை 1,01,590 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செயப்பட்டுள்ளது. இங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவின் தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள ஜிம்பாப்வே நாட்டின் தூதரகத்தில் பணியாற்றி வரும் 2 ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

closure,zimbabwe,embassy,​​notification,2 staff ,மூடல், ஜிம்பாப்வே, தூதரகம், அறிவிப்பு, 2 ஊழியர்கள்

இதையடுத்து அந்த தூதரகம் மூடப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தகவலை ஜிம்பாப்வே நாட்டின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை மந்திரி மோனிகா முத்ஸ்வாங்வா உறுதிபடுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் “தென் ஆப்பிரிக்காவில் உள்ள நமது தூதரகத்தில் 2 ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தூதரகம் மூடப்பட்டது என்கிற சோகமான செய்தியை தேசம் உங்களுக்கு தெரிவிக்கிறது.

தொற்று உறுதி செய்யப்பட்ட 2 ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தூதரகம் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது குறித்து முறையான அறிவிப்பு வெளியிடப்படும். அதுவரை தூதரக பணிகள் அனைத்தும் இணையம் வழியாக நடைபெறும்“ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :