Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் இதுவரை 2,23,209 பேருக்கு கொரோனா தொற்று; 2,16,214 பேர் குணம்

சென்னையில் இதுவரை 2,23,209 பேருக்கு கொரோனா தொற்று; 2,16,214 பேர் குணம்

By: Monisha Thu, 24 Dec 2020 2:01:46 PM

சென்னையில் இதுவரை 2,23,209 பேருக்கு கொரோனா தொற்று; 2,16,214 பேர் குணம்

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற மாவட்டங்களை விட சென்னைதான் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஆனால் தற்போது சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகளவில் குறைந்துள்ளது.

சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 23 ஆயிரத்து 209 ஆக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 3,022 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,16,214 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி இதுவரை 3,973 பேர் பலியாகியுள்ளனர்.

corona,vulnerability,treatment,cure,death ,கொரோனா,பாதிப்பு,சிகிச்சை,குணம்,பலி

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம்- 399 பேர்
அண்ணா நகர்- 346 பேர்
தேனாம்பேட்டை- 262 பேர்
தண்டையார்பேட்டை- 126 பேர்
ராயபுரம்- 201 பேர்
அடையாறு- 439 பேர்
திரு.வி.க. நகர்- 230 பேர்
வளசரவாக்கம்- 209 பேர்
அம்பத்தூர்- 216 பேர்
திருவொற்றியூர்- 53 பேர்
மாதவரம்- 79 பேர்
ஆலந்தூர்- 184 பேர்
பெருங்குடி- 131 பேர்
சோழிங்கநல்லூர்- 85 பேர்
மணலி- 42 பேர்.

Tags :
|
|