Advertisement

10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று

By: Nagaraj Mon, 09 Nov 2020 4:15:20 PM

10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று

10 ஆயிரம் பேருக்கு கொரோனா... மினுவங்கொட, பேலியகொட கொரோனா வைரஸ் கொத்தணியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், மினுவங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 451 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் இதுவரையில் 13 ஆயிரத்து 929 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ministry of health,corona,10 thousand people,character ,சுகாதார அமைச்சு, கொரோனா, 10 ஆயிரம் பேர், குணம்

நேற்றைய தினம் மாத்திரம் 510 பேர் புதிதாக இனங்காணப்பட்டதை அடுத்து இந்த தொகை அதிகரித்துள்ளது. அவர்களுள் ஆயிரத்து 41 பேர் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் ஆயிரத்து 7 பேர் பேர் மீன் சந்தை ஊழியர்கள் என்பதுடன் ஏனைய 8 ஆயிரத்து 403 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களில் 8 ஆயிரத்து 285 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், 5 ஆயிரத்து 609 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதேவேளை, இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 35 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Tags :
|