Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிமுக எம்எல்ஏ பவுன்ராஜுக்கு கொரோனா உறுதியானது; மருத்துவமனையில் அனுமதி

அதிமுக எம்எல்ஏ பவுன்ராஜுக்கு கொரோனா உறுதியானது; மருத்துவமனையில் அனுமதி

By: Nagaraj Thu, 06 Aug 2020 07:34:48 AM

அதிமுக எம்எல்ஏ பவுன்ராஜுக்கு கொரோனா உறுதியானது; மருத்துவமனையில் அனுமதி

அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா... பூம்புகார் தொகுதி, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பவுன்ராஜுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நாகை மாவட்டம், பூம்புகார் சட்டசபை தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பவுன்ராஜ், 62. இவர், ஜூலை, 30ம் தேதி, மயிலாடுதுறை புதிய மாவட்டம் பிரிப்பு தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்றார்.

corona,mla paunraj,confirmation,hospital,examination ,
கொரோனா, எம்எல்ஏ பவுன்ராஜ், உறுதி, மருத்துவமனை, பரிசோதனை

கூட்டத்தில் பங்கேற்ற நாகை எம்.பி., செல்வராசு, மயிலாடுதுறை எம்.பி., ராமலிங்கம் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, எம்.எல்.ஏ., பவுன்ராஜ், கடந்த 3ம் தேதி கொரோனா பரிசோதனை செய்தார்.

பரிசோதனை முடிவில், நேற்று அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் சிங்காரவேலுவுக்கும், தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர், வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.

Tags :
|