Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 21 மாவட்டங்களில் கொரோனா நோயாளிகள்; சுகாதார அமைச்சு தகவல்

21 மாவட்டங்களில் கொரோனா நோயாளிகள்; சுகாதார அமைச்சு தகவல்

By: Nagaraj Wed, 14 Oct 2020 4:05:34 PM

21 மாவட்டங்களில் கொரோனா நோயாளிகள்; சுகாதார அமைச்சு தகவல்

நாட்டின் 21 மாவட்டங்களில் கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இருப்பினும் நாட்டை முடக்கும் நிலை உருவாகவில்லை என்று சுகாதார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் டொக்டர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய மக்கள் செயற்படுவார்களாயின் நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே பதிவாகியுள்ள நோயாளர்களை தவிர, கொழும்பு மாவட்டத்தில 160 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 140 பேரும் கொரோானா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ministry of health,media spokesperson,identity,corona ,சுகாதார அமைச்சு, ஊடகப்பேச்சாளர், அடையாளம், கொரோனா

ஏனைய மாவட்டங்களை பொறுத்தவரையில் சில மாவட்டங்களில் ஒருவர் மாத்திரம் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். 4 மாவட்டங்களில் இவ்வாறு ஒருவர் மாத்திரம் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 4 மாவட்டங்களில் இருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள், பிரென்டிக்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள் என கண்டறியப்பட்டு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் நாட்டை முடக்கும் நிலை உருவாகவில்லை என சுகாதார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Tags :