Advertisement

கனடாவில் திருமண நிகழ்ச்சியால் கொரோனா பரவியதாக தகவல்

By: Nagaraj Sat, 31 Oct 2020 7:11:07 PM

கனடாவில் திருமண நிகழ்ச்சியால் கொரோனா பரவியதாக தகவல்

கனடாவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்று கொரோனா பரவலுக்கு காரணமாக அமைந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஒன்ராறியோவில் இரண்டு நாட்களாக நடந்த அந்த திருமண நிகழ்ச்சியில் 100 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த வியாழனன்று காலை நிலவரப்படி, அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

activity,marriage,corona spread,loneliness ,நடவடிக்கை, திருமணம், கொரோனா பரவல், தனிமை

அவர்களில் அதிகபட்சம், அதாவது 33 பேர் பீல் பகுதியைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் யார்க் மற்றும் ரொரன்றோ, வாட்டலூ மற்றும் Simcoe-Muskoka பகுதியைச் சேர்ந்தவர்கள். யார்க் பகுதியின் துணை மருத்துவ அலுவலரான Dr. Alanna Fitzgerald-Husek கூறும்போது, அந்த திருமணத்தில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமானோர் கலந்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.

அந்த திருமணத்தில் கலந்துகொண்டவர்கள் அடுத்த திங்கட்கிழமை வரை, அதாவது 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். அந்த திருமணத்தில் 100 பேருக்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டதையடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :