Advertisement

கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வாரம் நீடிப்பு

By: Nagaraj Mon, 14 Sept 2020 9:32:34 PM

கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வாரம் நீடிப்பு

கட்டுப்பாடுகள் நீடிக்கிறது... நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் தீவிரம் குறையாத நிலையில், அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீடிப்பதாக பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் தெரிவித்துள்ளார்.

இதன்படி கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் செப்டம்பர் 21ஆம் திகதி வரை தொடரும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

new zealand,restrictions,corona,one week ,நியூசிலாந்து, கட்டுப்பாடுகள், கொரோனா, ஒரு வாரம்

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நியூசிலாந்தில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் அடுத்த ஒரு வாரத்திற்குத் தொடரும். இதனைத் தொடர்ந்து ஒக்லாந்தில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் செப்டம்பர் 21ஆம் திகதிவரை தொடரும்.

கொவிட்-19 தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டம் அடுத்த வாரம் நடைபெறும். நியூஸிலாந்து மக்கள் முகக்கவசம், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்’ என கூறினார். நியூசிலாந்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால், 1,798பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 24பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :
|