Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள கொரோனா பரவல்

ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள கொரோனா பரவல்

By: Nagaraj Sat, 26 Sept 2020 10:41:39 AM

ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள கொரோனா பரவல்

ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 23 லட்சமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 86 ஆயிரத்து 508 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona,european countries,spread,increase ,கொரோனா, ஐரோப்பா நாடுகள், பரவல், அதிகரிப்பு

அதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 44 ஆயிரத்து 733 பேருக்கும், பிரேசிலில் 32 ஆயிரத்து 129 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.

குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் ஸ்பெயினில் 10 ஆயிரத்து 653 பேருக்கும், இங்கிலாந்தில் 6 ஆயிரத்து 634 பேருக்கும், பிரான்சில் 16 ஆயிரத்து 283 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 3 கோடியே 23 லட்சத்து 94 ஆயிரத்து 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 75 லட்சத்து 3 ஆயிரத்து 76 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 63 ஆயிரத்து 318 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 2 கோடியே 39 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளது . ஆனாலும், கொரோனாவால் இதுவரை 9 லட்சத்து 85 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

Tags :
|
|