Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருப்பூர் மாவட்டத்தில் அதிகரிக்க தொடங்கிய கொரோனா பரவல்...ஒரே நாளில் 16 பேர் பாதிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் அதிகரிக்க தொடங்கிய கொரோனா பரவல்...ஒரே நாளில் 16 பேர் பாதிப்பு

By: Monisha Tue, 07 July 2020 4:58:39 PM

திருப்பூர் மாவட்டத்தில் அதிகரிக்க தொடங்கிய கொரோனா பரவல்...ஒரே நாளில் 16 பேர் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 978 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 66 ஆயிரத்து 571 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், தமிழகத்தில் இதுவரை 1,571 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் ஏற்கனவே 204 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கையும் உயர தொடங்கியுள்ளது. நேற்று மட்டும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

coronavirus,infection,kills,treatment,testing ,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை,பரிசோதனை

பாதிக்கப்பட்ட 16 பேருக்கும் தற்போது மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 204 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று 16 பேர் என்பதால், தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ளது.

இதுபோல் நேற்று 64 பேருக்கு அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் 5 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Tags :
|