Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோவையில் காவல் துறையை குறிவைக்கும் கொரோனா; மேலும் 4 போலீசாருக்கு தொற்று உறுதி

கோவையில் காவல் துறையை குறிவைக்கும் கொரோனா; மேலும் 4 போலீசாருக்கு தொற்று உறுதி

By: Monisha Tue, 14 July 2020 4:16:17 PM

கோவையில் காவல் துறையை குறிவைக்கும் கொரோனா; மேலும் 4 போலீசாருக்கு தொற்று உறுதி

கோவையில் துடியலூர், போத்தனூர் போலீஸ் நிலையம் மற்றும் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் பணியாற்றிய மேலும் 4 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

கோவையில் போலீசாரிடையே கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. கோவையில் உள்ள போத்தனூர் மற்றும் துடியலூரில் உள்ள போலீஸ் நிலையங்களில் பணியாற்றிய போலீசாருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த காவல் நிலையங்கள் மூடப்பட்டன.

இதனையடுத்து கிருமிநாசினிகள் தெளித்து பின்னர் சில நாட்கள் கழித்து மீண்டும் காவல் நிலையங்க திறக்கப்பட்டன. ஆனால் மீண்டும் போத்தனூர் மற்றும் துடியலூர் காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் வேறு சில போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

coimbatore,police department,corona virus,vulnerability,police ,கோவை,காவல் துறை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,போலீஸ்

துடியலூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய 5 போலீசாருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அந்த போலீஸ் நிலையம் மூடப்பட்டு அங்கு பணியாற்றி வரும் போலீசாருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் மேலும் 2 பேருக்கு நேற்று தொற்று உறுதியானது. இதேபோல் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய ஒரு பெண் போலீஸ் ஏட்டுக்கு தொற்று உறுதியானதால் போலீஸ் நிலையம் மூடப்பட்டது. அங்கும் குற்றப்பிரிவில் பணியாற்றிய 35 வயது போலீஸ்காரருக்கு நேற்று தொற்று உறுதியானது.

மேலும், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் மாநகர குற்றப்பிரிவில் பணியாற்றும் 35 வயது ஏட்டுக்கும் கொரோனா உறுதியானது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதைத்தொடர்ந்து கோவை மாநகர குற்றப்பிரிவில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது.

கோவையை அடுத்த சூலூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய ஒரு போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து அங்கு பணியாற்றி வரும் 40 போலீசாருக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் வந்த பின்னர் தான் யார்-யார் பாதிக்கப்பட்டார்கள் என்ற விவரம் தெரியவரும்.

Tags :