Advertisement

நீலகிரியில் மீண்டும் அதிகரித்தது கொரோனா பரிசோதனை

By: Monisha Fri, 27 Nov 2020 10:07:10 AM

நீலகிரியில் மீண்டும் அதிகரித்தது கொரோனா பரிசோதனை

கொரோனா பரவலை கட்டுப்படுத்த இ-பாஸ் நடைமுறை கொண்டுவரப்பட்டது. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில் இ-பாஸ் நடைமுறை தளர்த்தப்பட்டது. இதனைத் தொடந்து தொடர்ந்து தீபாவளி பண்டிகைக்கு பின்னர் வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனால் அரசு பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. நீலகிரியில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் பரிசோதனை எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. கூட்டம் காரணமாக கொரோனா பரவுவதை தடுக்க அரசு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

nilgiris,tourism,corona,test,increase ,நீலகிரி,சுற்றுலா,கொரோனா,பரிசோதனை,அதிகரிப்பு

இந்த நிலையில் நேற்று ஊட்டி மத்திய பேருந்து நிலையத்தில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு ஊட்டியில் இருந்து மஞ்சூர், கோவை, மாயார், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக பேருந்துகளில் இருந்த பயணிகளிடம் இருந்து சளி மாதிரி சேகரித்தனர்.

பின்னர் பயணிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட சளி மாதிரிகள் பரிசோதனைக்காக ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பயணிகளின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் பதிவு செய்யப்பட்டது. கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
|
|