Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் கல்லூரி மற்றும் கல்லூரி விடுதிகளில் கொரோனா பரிசோதனை - 210 பேர் பாதிப்பு

சென்னையில் கல்லூரி மற்றும் கல்லூரி விடுதிகளில் கொரோனா பரிசோதனை - 210 பேர் பாதிப்பு

By: Monisha Fri, 18 Dec 2020 08:13:27 AM

சென்னையில் கல்லூரி மற்றும் கல்லூரி விடுதிகளில் கொரோனா பரிசோதனை - 210 பேர் பாதிப்பு

கல்லூரி விடுதிகளில் தங்கி இருந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் சென்னை ஐ.ஐ.டி. மற்றும் அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது.

சென்னை ஐ.ஐ.டி. வளாக விடுதிகளில் தங்கி இருந்த மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 191 மாணவர்கள், சமையல் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அதேபோல் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவ-மாணவிகள் 550 பேருக்கு பரிசோதனை செய்ததில் 6 பேருக்கு தொற்று உறுதியானது. தொற்று உறுதியாகி இருந்த அந்த 6 மாணவர்களுக்கும் எந்த அறிகுறியும் இல்லாமலேயே காணப்பட்டது.

இதை தொடர்ந்து, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் உள்ள கல்லூரிகள் மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் 15 மண்டலங்களில் 6 ஆயிரத்து 344 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

chennai,college,accommodation,corona examination,impact ,சென்னை,கல்லூரி,விடுதி,கொரோனா பரிசோதனை,பாதிப்பு

இதில் அதிகபட்சமாக சென்னை மாநகராட்சி 13-வது மண்டலத்தில் 2 ஆயிரத்து 498 பேருக்கு பரிசோதனை எடுக்கப்பட்டது. இந்த பரிசோதனை முடிவு வெளியாகியுள்ளது. 6 ஆயிரத்து 344 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் 13-வது மண்டலத்தில் 200 பேருக்கும், 11-வது மண்டலத்தில் 5 பேருக்கும், 15-வது மண்டலத்தில் 3 பேருக்கும், 12 மற்றும் 14-வது மண்டலங்களில் தலா ஒருவருக்கும் என மொத்தம் 210 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது தெரியவந்து இருக்கிறது.

பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 6 ஆயிரத்து 344 பேரில், 3 ஆயிரத்து 773 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்றும், 2 ஆயிரத்து 361 பேருக்கு பரிசோதனை முடிவு பெறப்படவில்லை என்று சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags :