Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மலேசியாவில் இன்று ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு

மலேசியாவில் இன்று ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Nagaraj Tue, 19 May 2020 11:01:47 PM

மலேசியாவில் இன்று ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு

மலேசியாவில் இன்று ஒரேநாளில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளை கதிகலங்கடித்து வருகிறது. இதில் மலேசியாவில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில் மலேசியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 47 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால் நாட்டில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,941 ஆக அதிகரித்தது. இதுவரை 113 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

corona,sure,vulnerability,number,increase,malaysia ,கொரோனா, உறுதி, பாதிப்பு, எண்ணிக்கை, அதிகரிப்பு, மலேசியா

மலேசியாவில் மக்கள் ஊரடங்கு விதிகளை பின்பற்றி நோய் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையில் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 லட்சத்து 24 ஆயிரத்து 208 ஆக அதிகரித்துள்ளது. 3 லட்சத்து 20 ஆயிரத்து 807 பேர் பலியாகி உள்ளனர். 19 லட்சத்து 28 ஆயிரத்து 313 பேர் மீண்டுள்ளனர்.

corona,sure,vulnerability,number,increase,malaysia ,கொரோனா, உறுதி, பாதிப்பு, எண்ணிக்கை, அதிகரிப்பு, மலேசியா

மேலும் தமிழகத்தில் இன்று புதிதாக 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டியது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்துள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. துபாய், குவைத், மலேசியாவிலிருந்து வந்த 36 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|
|