Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கெட்டபுலா மத்திய பிரிவு தோட்டத்தை சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா

கெட்டபுலா மத்திய பிரிவு தோட்டத்தை சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா

By: Nagaraj Mon, 07 Dec 2020 4:37:16 PM

கெட்டபுலா மத்திய பிரிவு தோட்டத்தை சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா

25 வயது பெண்ணுக்கு கொரோனா... நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெட்டபுலா மத்திய பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 25 வயதுடைய யுவதிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு – கிருலப்பனை பகுதியில் பணிப்புரிந்த இவர் கடந்த 25ஆம் திகதி தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். இதனையடுத்து அவர் சுய தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். அதனைத் தொடர்ந்து, அவரிடம் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்ட நிலையில், பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அவருக்கு வைரஸ் தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பிரதேசத்துக்கு பொறுப்பான சுகாதார அதிகாரிகள், சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் குறித்த யுவதியை கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

corona,vulnerability,arrest,terms,ajit rohana ,
கொரோனா, பாதிப்பு, கைது, விதிமுறைகள், அஜித் ரோஹன

இதற்கிடையில் சுகாதார விதிமுறைகளை மீறியக் குற்றச்சாட்டில் இதுவரையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறிப்பாக முகக் கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியைப் பேணாமை காரணமாக இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 111 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Tags :
|
|
|