Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தஞ்சையில் சோதனை சாவடியில் பணியாற்றிய போலீசாருக்கு கொரோனா!

தஞ்சையில் சோதனை சாவடியில் பணியாற்றிய போலீசாருக்கு கொரோனா!

By: Monisha Fri, 03 July 2020 6:28:19 PM

தஞ்சையில் சோதனை சாவடியில் பணியாற்றிய போலீசாருக்கு கொரோனா!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை நெருங்கியுள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 98 ஆயிரத்து 392 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 56 ஆயிரத்து 21 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், தமிழகத்தில் இதுவரை கொரோனா தாக்குதலால் 1,321 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் தற்போது சென்னை, வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மூலம் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

checkpoint,police,coronavirus,vulnerability,treatment ,சோதனை சாவடி,போலீசார்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை

இவர்களில் தஞ்சையை சேர்ந்த 3 பேரும், கும்பகோணத்தை சேர்ந்த 5 பேரும், பட்டுக்கோட்டை, ஒரத்தநாட்டை சேர்ந்த தலா 2 பேரும், மதுக்கூர், பாபநாசம், திருப்பனந்தாள் பகுதியை சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவர். இதில் சோதனை சாவடியில் பணியாற்றிய அதிராம்பட்டினத்தை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவருக்கும், கும்பகோணத்தை சேர்ந்த 72 வயதான பெண் டாக்டர் ஒருவரும் அடங்குவர்.

இதையடுத்து 15 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 21 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்.

Tags :
|