Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தினமும் 1100 பேருக்கு ஈரோட்டில் கொரோனா சிகிச்சை; ஆட்சியர் கதிரவன் தகவல்

தினமும் 1100 பேருக்கு ஈரோட்டில் கொரோனா சிகிச்சை; ஆட்சியர் கதிரவன் தகவல்

By: Nagaraj Thu, 25 June 2020 11:25:58 AM

தினமும் 1100 பேருக்கு ஈரோட்டில் கொரோனா சிகிச்சை; ஆட்சியர் கதிரவன் தகவல்

ஈரோட்டில் தினமும் 1,000 முதல் 1,100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

காய்கறி வியாபாரிகள், கால் டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்குகொகரோனா மருத்துவப் பரிசோதனை முகாம் ஈரோட்டில் நடந்தது. முகாமைப் பார்வையிட்ட ஆட்சியர் கதிரவன் கூறியதாவது:

corona,inspection,erode,district collector ,கொரோனா, பரிசோதனை, ஈரோடு, மாவட்ட ஆட்சியர்

கடந்த சில நாட்களில் 33 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 19 பேர் வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வந்தவர்களாவர். ஈரோடு மாவட்டத்தில் நாள்தோறும் 1000 முதல் 1,100 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, அனைவரும் பெருந்துறை கொரோனா சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஒரு நாள் தங்க வைக்கப்படுகின்றனர்.

அதன்பின்னர் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் சிகிச்சைக்கும், தொற்று உறுதி செய்யப்படாதவர்கள் வீடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|
|