Advertisement

ஈரோடு மாவட்டம் முழுவதும் 520 வீடுகளில் கொரோனா சிகிச்சை

By: Nagaraj Thu, 01 Oct 2020 5:49:06 PM

ஈரோடு மாவட்டம் முழுவதும் 520 வீடுகளில் கொரோனா சிகிச்சை

520 வீடுகளில் கொரோனா சிகிச்சை... ஈரோடு மாவட்டம் முழுவதுமாக 520 வீடுகளில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அம்மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா பன்மடங்கு அதிகரித்து வரும் சூழலில், ஈரோடு மாவட்டத்திலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அம்மாவட்ட சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அம்மாவட்டத்தில் இலவச முகாம்கள், பரிசோதனை மையங்கள், ஸ்கிரீனிங் மையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொரோனா சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதலில் கொரோனா பாதித்தவர்கள் ஸ்கிரீனிங் மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பி.பி ,சுகர், ஆக்சிஜன் என 5 வகையான பரிசோதனை மேற் கொள்ளப்படுகிறதாம்.

erode,recovering,patients,nurses,depression ,
ஈரோடு, குணமடைகின்றனர், நோயாளிகள், செவிலியர்கள், மன அழுத்தம்

அதில், லேசான அறிகுறி இருப்பதாக தெரிந்தால், அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி அவர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொள்கின்றனர். அதன்படி, தற்போது சேலம் மாவட்டத்தில் 520 வீடுகளில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அம்மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

இது குறித்து பேசிய சுகாதார பணிகள் இணை இயக்குனர், அறிகுறி இல்லாதவர்கள் வீடுகளிலேயே தனிமை படுத்தப்படுவதாகவும், அவர்களை அந்தந்த பகுதிகளில் இருக்கும் செவிலியர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வீட்டுக்கு சென்று பரிசோதனை செய்வதாகவும் தினமும் தொலைபேசி வாயிலாக நலம் விசாரிப்பதாகவும் கூறினார்.

இதன் மூலமாக, நோயாளிகளின் மன அழுத்தம் குறைவதாகவும் 10 நாட்களுக்குள் அவர்கள் கொரோனாவில் இருந்து குணமடைவதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags :
|
|