Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும் - ரஷிய நிறுவனம் அறிவிப்பு

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும் - ரஷிய நிறுவனம் அறிவிப்பு

By: Karunakaran Wed, 05 Aug 2020 12:59:00 PM

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும் - ரஷிய நிறுவனம் அறிவிப்பு

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸை தடுத்து நிறுத்த தடுப்பூசியை தயாரித்து, சோதனைகளை முடித்து, பொதுமக்கள் உபயோகத்துக்கு கொண்டு வருவதில் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷியா என பல நாடுகளும் கடும் போட்டியில் உள்ளன. இந்த நாடுகளின் தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனையில் உள்ளன.

ரஷியாவில் கமலேயா தொற்றுநோயியல், நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசியின் சோதனைகள் நிறைவு அடைந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ கடந்த வாரம் அறிவித்தார். அக்டோபர் மாதம் இந்த தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் இந்த தடுப்பூசி மீது உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

corona vaccine,children,russia,delay ,கொரோனா தடுப்பூசி, குழந்தைகள், ரஷ்யா, தாமதம்


இந்நிலையில் அந்நிறுவனத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க், நாங்கள் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி குழந்தைகளுக்கும் வேலை செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம். இருந்தபோதிலும், ரஷிய நாட்டின் சட்டப்படி ஒரு தடுப்பூசியானது பெரியவர்களுக்கு செலுத்தும் சோதனைகளின் முழு சுற்றையும் கடந்து செல்ல வேண்டும். அதன் பின்னர்தான் குழந்தைகளுக்கு பரிசோதிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து செச்சனோவ் டிரான்ஸ்லேஸனல் மருத்துவம் மற்றும் உயிரிதொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் வாதிம் டாராசோவ் கூறுகையில், தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்துவதற்கு முன்பாக இளம்விலங்குகள் மீது சோதனைகள் மேற்கொள்ளப்படும். அதன்பிறகு குழந்தைகளுக்கு தடுப்பூசியை பயன்படுத்துவது பற்றி முடிவு எடுக்கப்படும். குழந்தைகளுக்கு தடுப்பூசியை பயன்படுத்துவது பற்றி இப்போதே பேசுவது சரியல்ல என்று கூறினார்.

Tags :
|