Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிபர் டிரம்ப் தேர்தல் பிரச்சார பேரணியில் பங்கேற்றவர்களில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு

அதிபர் டிரம்ப் தேர்தல் பிரச்சார பேரணியில் பங்கேற்றவர்களில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Nagaraj Sun, 21 June 2020 3:56:33 PM

அதிபர் டிரம்ப் தேர்தல் பிரச்சார பேரணியில் பங்கேற்றவர்களில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு

அதிபர் டிரம்ப் பிரச்சார பேரணியில் பங்கேற்ற கட்சி ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் எதிர்கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வருகின்றன.

அமெரிக்காவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற அமெரிக்க ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடேனும், குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்பும் கடும் போட்டி போட்டு வருகின்றனர்.

trump rally,6 people,victim,corona,indictment ,டிரம்ப் பேரணி, 6 பேருக்கு, பாதிப்பு, கொரோனா, குற்றச்சாட்டு

இந்நிலையில் டிரம்ப் இந்த மாதம் முதலே பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். இதனையடுத்து அமெரிக்காவின் ஆக்லஹோமா மாகாணத்தில் தேர்தல் பிரச்சார பேரணி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் டிரம்பின் ஆக்லஹோமா பேரணியில் கலந்துகொள்ள இருந்த 6 குடியரசுக் கட்சி ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. இது அமெரிக்க எதிர்க்கட்சிகள் மத்தியில் விமர்சனத்துக்குள்ளாகியது.

நேற்று துல்சா பகுதியில் நடந்து முடிந்த பேரணியில் அதிபர் டிரம்ப் கலந்துகொண்டார். பாதுகாப்பு கருதி பேரணி ஊழியர்களுக்கு பேரணி நடைபெறும் முன்னரே கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 100 ஊழியர்கள் இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

trump rally,6 people,victim,corona,indictment ,டிரம்ப் பேரணி, 6 பேருக்கு, பாதிப்பு, கொரோனா, குற்றச்சாட்டு

பாதிக்கப்பட்ட 6 பேர் தற்போது மருத்துவனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய பேரணியில் அனைவரும் சமூக இடைவெளி விட்டு நடந்துசெல்ல அறிவுறுத்தப்பட்டனர். அமெரிக்காவின் நியூயார்க், கலிஃபோர்னியா உள்ளிட்ட மாகாணங்களில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் டிரம்பின் பேரணிக்கு கொரோனா தாக்கம் குறைவாக உள்ள ஆக்லஹோமா மாகாணம் தேர்வு செய்யப்பட்டது.

வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.இதில் வெற்றி பெற டிரம்ப் அமெரிக்க மக்கள் மீது அக்கறை இல்லாமல் பேரணி நடத்தி வருகிறார் என ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஆக்லஹோமாவின் துல்சா பகுதியில் நேற்று மட்டும் 2,206 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் டிரம்ப் தன் தேர்தல் வெற்றிக்காக இங்கு பேரணி நடத்துவது பொதுமக்களுக்கு கொரோனா பாதிப்பை உண்டாக்கும் என குற்றஞ்சாட்டப்படுகிறது.

Tags :
|
|