Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சோதனை சாவடி கொரோனா பரிசோனை மையத்தில் பணியாற்றியவருக்கு கொரோனா பாதிப்பு

சோதனை சாவடி கொரோனா பரிசோனை மையத்தில் பணியாற்றியவருக்கு கொரோனா பாதிப்பு

By: Monisha Wed, 10 June 2020 11:15:46 AM

சோதனை சாவடி கொரோனா பரிசோனை மையத்தில் பணியாற்றியவருக்கு கொரோனா பாதிப்பு

குமரி மாவட்டத்திற்கு வெளியூர்களில் இருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகின்றனர். உள்ளூரில் வசிப்போருக்கு கொரோனா தொற்று இல்லாத நிலையில் சென்னை, மும்பை உட்பட வெளியூர்களில் இருந்து வருவோரால் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குமரி மாவட்டத்தில் 105 பேராக அதிகரித்துள்ளது.

வெளியூர்களில் இருந்து வருவோரை சோதனை செய்வதற்காக தமிழக, கேரள எல்லையான களியக்காவிளை, மற்றும் ஆரல்வாய்மொழி சோதனை சாவடிகளில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு துல்லியமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

checkpoint,corona examination center,lab technician,corona impact ,சோதனை சாவடி,கொரோனா பரிசோனை மையம்,லேப் டெக்னீசன்,கொரோனா பாதிப்பு

இந்நிலையில் களியக்காவிளை சோதனை சாவடியில் கொரோனா பரிசோனை மையத்தில் பணியில் இருந்த கீழ்குளம் ஆரம்ப சுகாதார நிலைய தற்காலிக பணியாளரான லேப் டெக்னீசன் ஒருவருக்கு தொடர் காய்ச்சல் இருந்து வந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சளி, ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து லேப் டெக்னீசன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். லேப் டெக்னீசனின் ஊரான கருங்கல்லை அடுத்த கண்ணன்விளையை சுற்றிய சாலைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன.

Tags :