Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு

டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு

By: Nagaraj Fri, 27 Nov 2020 2:22:20 PM

டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு

டெல்லி அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய்க்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு, மத்திய மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கைகளாலும், மக்களின் ஒத்துழைப்பாலும் கடந்த சில வாரங்களாக குறைந்து வருகிறது. கொரோனாவின் இரண்டாவது அலை வீசும் என்பதால், தற்போது வரை ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

இந்த கொரோனாவின் தாக்குதலுக்கு பொதுமக்கள் மட்டும் இல்லாமல் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், உள்ளிட்ட முன்கள பணியாளர்களும், அரசியல் கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ, எம்.பி, மத்திய - மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோரும் ஆளாகி வருகின்றனர்.

hospital,minister gopal roy,health,corona ,மருத்துவமனை, அமைச்சர் கோபால் ராய், உடல்நிலை, கொரோனா

இந்நிலையில், டெல்லி அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய்க்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, டெல்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் கோபால் ராயின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்று மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|