Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோவையில் நர்ஸ் உட்பட 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது

கோவையில் நர்ஸ் உட்பட 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது

By: Nagaraj Tue, 23 June 2020 11:10:52 PM

கோவையில் நர்ஸ் உட்பட 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது

நர்ஸ் உட்பட 22 பேருக்கு கொரோனா...கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் உட்பட, 22 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

கோவை, சவுரிபாளையத்தை சேர்ந்த 52 வயது பெண், கோவை அரசு மருத்துவமனையில், நர்ஸாக பணியாற்றி வருகிறார். இவருக்கு, கடந்த 19ம் தேதி முதல் காய்ச்சல் மற்றும் சளி பிரச்னை இருந்துள்ளது. இதனால், விடுமுறையில் இருந்துள்ளார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதனால், அவருடன் பணியாற்றி வந்த டாக்டர்கள், நர்ஸ்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யும் பணி நடக்கிறது. கோவை வெள்ளலுார் மத்திய அதிவிரைவுப்படையில் பணியாற்றி வரும் 50 வயதுடைய போலீஸ் ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன் மதுரை சென்று வந்தார். பரிசோதனை செய்தபோது, அவர் மற்றும் அவரின் மனைவி, மகன், மகள் ஆகியோருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

coimbatore,figure,corona,292,nurse ,கோவை, எண்ணிக்கை, கொரோனா, 292, நர்ஸ்

பெங்களூரு விமானத்தில் வந்த சூலூர் விமானப்படை தளத்தை சேர்ந்த 22 வயது இளைஞர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 22 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அனைவரும் இ.எஸ்.ஐ., மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம், கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 292 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம், கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 8 ஆண்கள், 4 பெண்கள், ஒரு திருநங்கை உள்பட 13 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Tags :
|
|
|