Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,085 ஆக உயர்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,085 ஆக உயர்வு

By: Monisha Wed, 08 July 2020 12:10:23 PM

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,085 ஆக உயர்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 6,942 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 143 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ளது. நேற்று புதிதாக 3 ஆயிரத்து 616 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 18 ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 45 ஆயிரத்து 839 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 545 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 71 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 1,636 பேர் உயிரிழந்துள்ளனர்.

chengalpattu district,coronavirus,influence,kills,treatment ,செங்கல்பட்டு மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 71,230 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 6,942 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று காலை நிலவரப்படி மேலும் 143 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,085 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,954 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 136 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags :
|