Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியது!

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியது!

By: Monisha Sat, 04 July 2020 1:16:46 PM

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியது!

நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 921 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 46 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்து 721 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 42 ஆயிரத்து 955 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 58 ஆயிரத்து 378 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 1,385 பேர் உயிரிழந்துள்ளனர்.

corona virus,vulnerability,death,treatment,curfew,mask ,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை,ஊரடங்கு,முகக்கவசம்

நெல்லை மாவட்டத்தில் நேற்று வரை 921 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 619 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 294 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 967-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மாநில அரசு பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மக்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு செல்லக்கூடாது என்றும் வெளியில் செல்லும்போது முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tags :
|
|