Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்!

காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்!

By: Monisha Tue, 07 July 2020 4:58:51 PM

காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்!

தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 978 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 66 ஆயிரத்து 571 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், தமிழகத்தில் இதுவரை 1,571 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 182 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. மாவட்டம் முழுவதும் இதுவரை 2,729 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 1,032 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 1661 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 36 பேர் பலியானார்கள்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 175 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரையில் 4,983 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 3,217 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 1,666 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 100 பேர் பலியாகி உள்ளனர்.

kanchipuram,thiruvallur,chengalpattu,coronavirus,influence ,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,செங்கல்பட்டு,கொரோனா வைரஸ்,பாதிப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு பஸ் கண்டக்டர் (55 வயது) நேற்று முன்தினம் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 213 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,853 ஆக உயர்ந்தது. இவர்களில் 3,766 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்தது. மற்றவர்கள் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags :