Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையிலிருந்து விமானத்தில் கோவை வந்த இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னையிலிருந்து விமானத்தில் கோவை வந்த இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Nagaraj Wed, 27 May 2020 5:02:28 PM

சென்னையிலிருந்து விமானத்தில் கோவை வந்த இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னையில் இருந்து விமானத்தில் கோவை வந்த இளைஞருக்கு, 'கொரோனா' தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவருடன் விமானத்தில் வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கோவையில், கொரோனா தொற்று உறுதியான, 146 பேரில், 145 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின், கடந்த 23 நாட்களாக புதிதாக யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை. இந்நிலையில், நேற்றுமுன்தினம்( மே 25) முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது.


flight,madras,youth,corona,impact ,விமானம், சென்னை, இளைஞர், கொரோனா, பாதிப்பு

சென்னை, பெங்களூரு, டில்லி ஆகிய பகுதிகளில் இருந்து, கோவை விமானநிலையத்துக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்றுமுன்தினம், 361 பேர், நான்கு விமானங்களில் கோவை வந்தனர். சுகாதாரதுறையினர் பரிசோதனை செய்ததில், கோவை, ரத்தினபுரியை சேர்ந்த, 24 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

இவர், சென்னையில் உள்ள ஓட்டல் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவருடன் பயணித்த சக பயணிகள் 114 பேரையும் சுகாதார துறையினர் தனிமைப்படுத்தியுள்ளனர். நேற்று இரண்டு விமானங்களில் 160 பேர், கோவை வந்தனர். அவர்களுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது.

flight,madras,youth,corona,impact ,விமானம், சென்னை, இளைஞர், கொரோனா, பாதிப்பு

பாதிக்கப்பட்ட நபர் கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 'கோவையில் பாதிக்கப்பட்ட நபர்களின் பட்டியலில், இவர் சேர்க்கப்படமாட்டார்' என, டீன் நிர்மலா தெரிவித்தார்.

மாவட்ட சுகாதாரதுறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறுகையில், ''கோவைக்கு இதுவரை, ஆறு விமானங்களில் மொத்தம், 521 பேர் கோவை விமான நிலையம் வந்துள்ளனர். ''இதில், 331 பேர் கோவை மற்றும் 190 பேர் ஈரோடு, சேலம், திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள். பரிசோதனையில், 422 பேருக்கு தொற்று இல்லை. 99 பேரின் முடிவுகள் காத்திருப்பில் உள்ளன. ஒருவருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.

Tags :
|
|
|
|