Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிபர் தேர்தலில் டிரம்ப் தோற்க வேண்டும் என்று விரும்பும் நாடுகள்

அதிபர் தேர்தலில் டிரம்ப் தோற்க வேண்டும் என்று விரும்பும் நாடுகள்

By: Nagaraj Sat, 08 Aug 2020 4:22:14 PM

அதிபர் தேர்தலில் டிரம்ப் தோற்க வேண்டும் என்று விரும்பும் நாடுகள்

அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை... அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோற்க வேண்டும் என சீனா, ஈரானும் விரும்புவதாகவும், அதற்காக மறைமுக பணிகளில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு எதிராக ரஷ்யா செயல்பட்டு வருவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதாவது: அமெரிக்க தேர்தலில் தாங்கள் விரும்புபவர்கள் வெற்றி பெற வேண்டும் என, விரும்பும் நாடுகள், அது தொடர்பாக மறைமுக பணிகளிலும் ரகசிய அறிக்கையும் வெளியிட்டுள்ளன. மறைமுகமாகவும் தலையிடுகின்றன.

தேர்தல் நடக்க இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில், மறைமுகமாக தலையீடுகின்றன. டிரம்ப் தோல்வியடையும் விரும்பும் நாடுகள் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. டிரம்ப்பை கணிக்க முடியாதவராக கருதும் அந்நாடு, டிக்டாக், ஹாங்காங் மற்றும் கொரோனா விவகாரங்களில், அவரை கடுமையாக விமர்சனம் செய்கிறது.

intelligence,alert,china,russia,trump,jopitan ,உளவுத்துறை, எச்சரிக்கை, சீனா, ரஷ்யா, டிரம்ப், ஜோபிடன்

இதற்கடுத்து, டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றால், தங்கள் பிராந்தியத்தில் அச்சுறுத்தல் நீடிக்கும் என்பதால், ஆன்லைனை பயன்படுத்தி, தவறான தகவல்களை பரப்பி வருகிறது. 2016 ல் நடந்த அதிபர் தேர்தலில், ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராக வேலைபார்த்த ரஷ்யா இந்த முறையும், ஜோ பிடனை, தங்களுக்கு எதிரானவராகவே பார்க்கிறது.

இதனால், சமூக வலைதளம் மற்றும் டிவி மூலம் தவறான செய்தியை வெளியிட்டு வருகிறது. உளவுத்துறையின் கணிப்புகள் உண்மை தன்மை வாய்ந்தவை, அரசியல் சாராதவை. இந்த தகவல்கள் குறித்து டிரம்ப் , ஜோபிடன் மற்றும் பார்லிமென்ட் உறுப்பினர்களிடமும் தெரிவித்துவிட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
|
|
|
|