Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குரங்குகளிடம் பரிசோதிக்கப்பட்ட கோவாக்சின்; நல்ல நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டதாக தகவல்

குரங்குகளிடம் பரிசோதிக்கப்பட்ட கோவாக்சின்; நல்ல நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டதாக தகவல்

By: Nagaraj Sat, 12 Sept 2020 8:41:14 PM

குரங்குகளிடம் பரிசோதிக்கப்பட்ட கோவாக்சின்; நல்ல நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டதாக தகவல்

நல்ல நோய் எதிர்ப்பு சக்தி... இந்தியாவில் தயாரிக்கப்பட்டு உள்ள கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் குரங்குகளிடம் பரிசோதனை நடத்தி பார்த்ததில் நல்ல நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தடுப்பு மருந்து உலகிலேயே மிகவும் பழமையான குரங்கு இனமான rhesus macaquesக்கு கொடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. அதிலும் குறிப்பாக இந்த வகை குரங்கு இனங்களில் அதிகமாக பி வைரஸ் இருக்கும். அதிலும் இந்த வகையான குரங்குகளில் வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தாது.

ஆனால், இதில் இருந்து மனிதர்களுக்கு எளிதில் இந்த வைரஸ் பரவும். இந்த வகை குரங்குகளுக்குத்தான் தற்போது கோவாக்சின் கொடுத்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

immunity,power,monkeys,covaxin ,நோய் எதிர்ப்பு, சக்தி, குரங்குகள், கோவாக்சின்

பரிசோதனையின்போது சில குரங்குகளுக்கு உண்மையான கோவாக்சின் மருந்தும், சில குரங்களுக்கு போலி ஊசியும் போடப்பட்டது.

அப்போது இதில் உண்மையான கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் செலுத்தப்பட்ட குரங்குகளுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டுள்ளது . இந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட பின்னர் வைரஸ் நோய் கிருமிகளை தொற்றும் விதத்தில் குரங்கள் விடப்பட்டன. அதன் பிறகு பரிசோதித்துப் பார்த்ததில் நல்ல நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

Tags :
|